உக்ரைனை விட்டு 20000 இந்தியர் வெளியேற்றம்- அரிந்தம் பாக்சி..!

Default Image

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் மக்கள் மீட்க மத்திய அரசால் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு வருகின்றனர். ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கடந்த பல நாட்களாக வெளியுறவுத்துறை அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று செய்தியாளர்களிடம்  பேசியபோது, ஆபரேஷன் கங்காவின் கீழ் உக்ரைனில் இருந்து இதுவரை 48 விமானங்கள் சுமார் 10,348 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவை வந்தடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 16 விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இன்னும் சிலர் உக்ரைனில் உள்ளனர். நாங்கள் தொடர்ந்து விமானங்களைத் திட்டமிடுவோம். உக்ரைன் அதிகாரிகளிடம் சிறப்பு ரயில்களை கோரியுள்ளோம். ஆனால், அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று அவர் கூறினார். இதற்கிடையில், நாங்கள் பேருந்துகளை ஏற்பாடு செய்கிறோம். நாங்கள் எங்களின் அறிவுரைகளை வழங்கியதில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைன் எல்லையை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவித்தார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் மற்றும் பிசோச்சின் மீது நாங்கள் சிறப்புக் கண் வைத்துள்ளோம். அங்கு சில பேருந்துகளை இயக்கி வருகிறோம். 5 பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாலையில் அதிக பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிசோச்சினில் 900 முதல் 1000 இந்தியர்களும், சுமியில் 700க்கும் மேற்பட்ட இந்தியர்களும் சிக்கியிருப்பது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.

ருமேனிய தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் மற்றும் போலந்து நகரமான ர்ஜெசோவிலிருந்து ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு அரசின் ஆபரேஷன் கங்காவின் கீழ் விமானப்படை நான்கு விமானங்களை இயக்கி, 798 இந்தியர்களை அழைத்து வந்தது.

விமானப்படை இதுவரை ஏழு விமானங்கள் மூலம் உக்ரைனில் இருந்து மொத்தம் 1,428 இந்தியர்களை அழைத்து வந்துள்ளது. ஹங்கேரி மற்றும் ரோமானிய வான்வெளியைப் பயன்படுத்தி, மேலும் மூன்று C-17 விமானங்கள் நேற்றிரவு ஹிண்டன் விமானத் தளத்திற்குத்  வந்தன என தெரிவித்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்