20,000 விவசாயிகள் டெல்லியில் திரள திட்டம்… இன்று பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு!

farmers protest delhi

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்துக்காக சுமார் 20,000 விவசாயிகள் திரள திட்டமிட்டுள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 2,500 டிராக்டர்களில் ஊர்வலமாக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நாளை போராட்டத்துக்காக டெல்லி நோக்கி வரும் விவசாயிகள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை..! 7 பேர் தாயகம் திரும்பினர்!

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க பல்வேறு சாலைகளில் இரும்பு, கான்கிரீட் தடுப்புகளை அமைத்து எல்லையில் காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக சிங்கூர் எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெல்லியில் இணைய சேவை தடை மற்றும் 144 தடை உத்தரவு என காவல்துறை பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

காவல்துறை கெடுபிடிகளை தாண்டி விவசாயிகள் செல்வதை தடுக்க டிரோன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது, இதுபோன்று விவசாயிகள் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த சூழலில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, போராட்டத்துக்கு முன்பு விவசாய நிர்வாகிகளுடன் மத்திய இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இன்று மாலை சண்டிகரில் பேச்சுவார்த்தை நடக்கும் என மத்திய கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்தராய் பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ல் நடைபெற்ற தொடர் போராட்டத்தின்போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விவசாய சங்கத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்