2000 பெண்களுக்கு 6 மாதம் இலவசமாக துணி துவைத்து கொடுக்க வேண்டும் – குற்றவாளிக்கு தீர்ப்பளித்த பீகார் நீதிமன்றம்!

Default Image

பெண் ஒருவரை அனைவரது துணிகளையும் துவைக்க சொல்லிய நபருக்கு, 2000 பெண்களுக்கு 6 மாதம் இலவசமாக துணி துவைத்து கொடுக்க வேண்டும் என பீகார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பீகாரில் உள்ள மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜஞ்சர்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு பெண்ணை அனைவரது துணிகளையும் துவைக்க சொல்லி துன்புறுத்தியதாகவும், அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இந்த பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர், கிராமத்திலுள்ள அனைத்து பெண்களின் ஆடைகளையும் துவைக்க வேண்டும் எனவும், இதனால் அவர் மனதில் பெண்கள் மீது ஒரு மரியாதை உருவாகும் எனவும் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் குற்றம் சாட்டப்பட்ட நபர் பெண்களின் ஆடைகளை கழுவிய பிறகு அவர்கள் துணிகளை இஸ்திரி செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 2000 பெண்கள் உள்ளதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் 20 வயதுடைய லால் குமார் ஆவார். இவர் ஏற்கனவே சலவை வேலைதான் செய்து வருவதாகவும், இதனால் தான் இவருக்கு இப்படிப்பட்ட ஒரு தண்டனையை கொடுத்து பெண்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்