கைவிடப்படுகிறதா!??ரூ.2000 நோட்டுக்கள்..விளக்கம் தரும் மத்திய அரசு
ரூ.2000 நோட்டு அச்சடிப்பை கைவிடப்படுவதாக வெளியாகிய தகவலுக்கு பாரளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர் லோக்சபாவில் 2019 – 20ம் நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க, ‘ஆர்டர்’ வழங்கவில்லை . அதேநேரத்தில் நோட்டுக்கள் அச்சடிப்பதை கைவிடும் முடிவும் எடுக்கப்படவில்லை. பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளில் ‘ஏ.டி.எம்களில் மட்டும் தான் 2,000 ரூபாய்க்கு பதிலாக, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைக்க உத்தரவிட்டு உள்ளதே தவிர அதுகூட மக்களின் நன்மைக்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.இதுவரையில் 7.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ரூ 2,000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது. அதில் 5.49 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது. கரன்சி கருவூலத்தில் மட்டும் 0.93 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியும் கலந்து ஆலோசித்து ரூபாய் நோட்டு அச்சடிப்பு குறித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.