கர்நாடகத்தில் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி – முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!
கர்நாடகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அவர்கள் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், கர்நாடகாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அம்மாநிலத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த முதல்வர் எடியூரப்பா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல நலத்திட்டங்கள் மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள 1,250 கோடிக்கு மேல் உள்ள விவசாயிகள் மற்றும் அமைப்பு சரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு பதிலாக 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிமம் பெற்ற ஆட்டோ ஓட்டுனர், வண்டி ஓட்டுனர்களுக்கு 3000 ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலமாக சுமார் 2.10 லட்சம் பேர் பயன் அடைவார்கள் எனவும் கூறப்படுகிறது.