200 யூனிட் இலவச மின்சாரம்..ஜூலை 1 முதல் நடைமுறை..! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு..!

Published by
செந்தில்குமார்

கர்நாடகாவில் ஜூலை 1ம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று விதான்சௌதா மண்டபத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உட்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், தற்பொழுது கர்நாடகாவில் ஜூலை 1ம் தேதி முதல், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், நாங்கள் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தலின் போது நாங்கள் அளித்த ஐந்து வாக்குறுதிகளையும் முழுமையாக விவாதித்தோம். இந்த 5 உத்தரவாதங்களும் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம், என்று சித்தராமையா கூறினார்.

5 வாக்குறுதிகள் என்ன.?

  • ஒவ்வொரு வீட்டின் தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 2,000 வழங்கப்படும்.
  • வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 மற்றும் வேலையில்லாத பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.
  • வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
  • கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
  • கர்நாடகாவில் பெண்கள் பயணம் செய்ய இலவச பேருந்து டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
Published by
செந்தில்குமார்

Recent Posts

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

56 minutes ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

1 hour ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

1 hour ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

2 hours ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

3 hours ago