#Breaking : ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ரயில்கள் இயக்கம்.!

ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்களில் ஒன்றான ரயில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 1 முதல், இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் எனவும், கால அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும், விரைவில் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறப்பு ரயில் தொடங்கும் வரையில் தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலே பத்திரமாக இருக்குமாறு அறிறிவுறித்தினார்.
மேலும், ஜூன் 31 வரையில் பொது ரயில் சேவை இயங்காது என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.