வாரத்திற்கு 200, மாதத்திற்கு 800.! – மத்திய சுகாதாரத்துறை நிர்ணயம்.!
கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அறிய வாரத்திற்கு 200 சோதனைகள் மற்றும் மாதத்திற்கு 800 சோதனைகள் நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தினந்தோறும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 22,455 பேர் குணமடைந்து உள்ளார்கள். இந்த நிலையில், எந்த அறிகுறியும் இல்லாமல் பாதிப்புகள் அதிக அளவில் பதிவாகியுள்ள நிலையில், மாவட்ட அளவில் சோதனைகளை அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதாவது, நாடு முழுவதும் மாவட்ட அளவிலான கொரோனா சோதனை அதிகப்படுத்தப்படும். வைரஸ் பரவுவது குறித்து அறிய வாரத்திற்கு 200 சோதனைகள் மற்றும் மாதத்திற்கு 800 சோதனைகள் நடத்த சுகாதார அமைச்சகம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எந்தவொரு கொரோனா வைரஸ் அறிகுறிகளும் இல்லாதவர்களுக்கு இந்த சோதனைகள் செய்யப்படும் என்றும் இதனால் அறிகுறியற்ற பாதிப்புகளை கண்டறிய உதவும் என்று கூறியுள்ளது. இந்த சோதனையை நிறைவேற்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்ய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், இந்த சோதனையில் அதிக ஆபத்துள்ள குழு மற்றும் குறைந்த ஆபத்துள்ள குழு என 2 குழுக்களாக பிரித்துள்ளது. அதிக ஆபத்துள்ள குழுவில் சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கியது. இவர்கள் சோதனைத் திட்டம் வாரத்திற்கு குறைந்தது 100, மாதத்திற்கு 400 மாதிரிகள் சேகரிப்பதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றோரு குழுவான குறைந்த ஆபத்துள்ள குழு, கர்ப்பிணிப் பெண்கள், இருமல் மற்றும் சளி உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் கீழ் வகைப்படுத்தப்படுவார்கள். இந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 400 மாதிரிகள் சேகரிக்கும் இலக்கை அமைச்சகம் நிர்ணயித்து உள்ளது.