இந்தோனேசியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடைந்த 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள்!

கொரோனா சிகிச்சைக்காக இந்தோனேசியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒரு புறமிருக்க ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனையில் அத்தியாவசிய உபகரணங்களுக்கு பற்றாக்குறை என ஒருபுறம் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த நெருக்கடி கால கட்டத்தில் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைத்து உதவிக்கரம் நீட்டி வருகிறது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் இருந்து தற்பொழுது 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் தற்பொழுது இந்தியாவை வந்தடைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தோனேசியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளதாகவும், இந்தோனேசியாவிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஆயிரம் ஆண்டு பழமையான நாகரிக இணைப்புகளை மேலும் வளப்படுத்தும் வகையில் இந்த உதவி அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
????????????????
Further deepening our millennia old civilisational links. Welcome shipment of 200 oxygen concentrators from our friendly maritime neighbour Indonesia. pic.twitter.com/jzeDcI6q1J— Arindam Bagchi (@MEAIndia) May 12, 2021