கொரோனா நெறிமுறையை மீறி இரவு விருந்து ! 200 பேர் மீது வழக்கு பதிவு

Published by
Venu

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 200 பேர் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி இரவு விருந்தில் பங்கேற்று, கொரோனா நெறிமுறையை மீறியாக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள போஜியூர் கடற்கரையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று  நடைபெற்ற விருந்து முறையான அனுமதி இல்லாமல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இதன்  வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

ஆனால் இது தொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், “எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை  என்றும்  இரவு 7 மணி முதல் அதிகாலை 1 மணி வரை இந்த விருந்து நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள தொற்று நோய்  ஒழுங்குமுறையின் கீழ் விருந்தின் அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலாத் தலமாக போஜியூர் கடற்கரை விளங்குகிறது.விருந்தில் ஏதேனும் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா என போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Published by
Venu

Recent Posts

வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க மத்திய அரசு திணறி வருகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க மத்திய அரசு திணறி வருகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…

7 minutes ago

டி20 கிரிக்கெட் தொடரில் வரலாறு படைத்த வருண் சக்கரவர்த்தி!

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…

13 minutes ago

STR50 : கைவிட்ட கமல்ஹாசன்…சிம்பு எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…

1 hour ago

முதல் பந்திலேயே சிக்ஸ்… டி20யில் ரெக்கார்ட் வைத்த சஞ்சு சாம்சன்.!

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…

2 hours ago

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் கோளாறு!

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…

2 hours ago

செய்தியாளர்கள் முன் நிர்வாணமாக நின்ற மாடல் நடிகை.! இணையத்தை திக்குமுக்காட வைத்த வீடியோ…

அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…

2 hours ago