குஜராத்தில் போக்ஸோ வழக்கின் கீழ் திருமணமான 20 வயது பெண் கைதாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கோக்ராவை சேர்ந்தவர் 20 வயதான சோனால் பாட்டில். இவருக்கு இளம் வயதிலேயே திருமணம் முடிந்ததால் தற்போது 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவரது கணவர் இவர் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன் சோனால் பாட்டீலுக்கு 17 வயதான மாணவருடன் நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பு காதலாக மாறியுள்ளது.
திருமண வாழ்க்கை குறித்த கசப்பான விஷயங்களால் தான் இதிலிருந்து விடுபட விரும்புவதாக சோனால் சிறுவனிடம் கூறியுள்ளார். பின்பு, சிறுவனை அழைத்து கொண்டு மகிசாஹர் மாவட்டம் சந்திராம்பூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சிறுவனை காணும் என்பதால் அவனது வீட்டில் உள்ளவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பிறகு சோனாலையும், சிறுவனையும் கண்டுபிடித்து சோனாலை கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளனர்.
சோனால் மீது மேற்கொண்ட விசாரணையின் போது, சந்திராம்பூரில் சோனால் 17 வயது சிறுவனுடன் உடலுறவு மேற்கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…