கொரோனா வைரஸ் தாக்குதலால் 20 லட்சம் பேர் வேலை இழப்பு – பிஓசிஐ
கொரோனா வைரஸ் தாக்குதலால் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக பஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமால்லாமல், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு, கொரோனா வைரஸ் முடக்கத்தால் தனியார் பஸ் மற்றும் சுற்றுலா டாக்ஸி ஆபரேட்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்றும், சம எண்ணிக்கையிலானோர் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.