தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம் என அருணாச்சல பிரதேசத்தில் அறிவிப்பு.
உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இவை செலுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் மாரடைப்பு ஏற்படும் என பல இடங்களில் வதந்திகளை கிளம்பி வருகிறது. இந்த வதந்திகளை ஒழிக்கும் விதமாக பல இடங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு சில சலுகைகளையும் அரசாங்கம் அறிவித்து வருகிறது. அது போல அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள ஸ்காலி என்னும் பகுதியிலுள்ள வட்ட அலுவலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடிய பொதுமக்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் குழப்பங்களை நீக்கும் வகையிலும், ஜூன் 20-ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடிய 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் 20 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…