கேரளாவிலுள்ள கோழி தீவன ஆலையில் தீ விபத்து – 20 பேர் காயம்!
கேரளாவிலுள்ள கோழி தீவன ஆலை எண்ணெய் தொட்டியில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக, தீயணைப்பு வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் திருவிழாம்குன்னு பகுதியில் கோழி தீவன ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உள்ள எண்ணெய் தொட்டியில் நேற்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு, தீ பிடித்து பரவ தொடங்கியுள்ளது. எனவே இந்த எண்ணெய் கசிவுகள் தொடர்பாக தீயணைப்புத் துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்துள்ளனர். அப்போது தீ வேகமாகப் பரவி எண்ணெய் தொட்டியின் வெப்பநிலை அதிகரித்ததால் எண்ணெய் தொட்டியில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று, இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அங்கு இருந்த எண்ணெய் தொட்டியில் அதிக வெப்பநிலையில் எண்ணெய் இருந்ததாகவும், தீ பரவியதால் மேலும் வெப்பநிலை அதிகரித்ததன் காரணமாகத்தான் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 20 பேரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.