டெல்லி உத்தரப்பிரதேசம் செல்லும் சாலையில் பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்
இன்று அதிகாலை 3:22 மணி அளவில் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சுக்தேவ் விஹார் எனும் பகுதியில் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள உத்திரபிரதேச சாலை வழியாக பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த பேருந்து செல்லும் வழியில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து என்எஸ்சி காவல் நிலையத்திற்கு விபத்து தொடர்பான தகவல் வந்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மேலும் ஆம்புலன்ஸ் சேவையும் அவ்விடத்தில் நடைபெற்றுள்ளது. காயமடைந்த அனைவரையும் அருகில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் விபத்து நடந்ததும் பேருந்தின் ஓட்டுனர் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். தலைமறைவாக உள்ள பேருந்து ஓட்டுனரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…