இறுதிச் சடங்கிற்கு 20 பேருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால், 1000 பேர் ஒரு மது கடையில் கூட அனுமதிக்கப்படுகிறார்கள் என எம்.பி. சஞ்சய் ராவத் பதிவிட்டு உள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் 40 நாள்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, டெல்லி, உள்பட பல மாநிலங்களில் திறக்கப்பட்டன. இதனால், மது பிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மது பிரியர்கள் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், மது வாங்கிச் செல்கின்றனர். இதனால் கொரோனா பரவ வாய்ப்புகள்இருப்பதாக பல தரப்பிலிருந்தும் கருத்து எழுந்து உள்ளது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆன்லைனில் மதுபான விற்பனையை நடத்த மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியது.
இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், இறுதிச் சடங்கிற்கு 20 பேருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஏனென்றால் ஆன்மா(spirit) உடலை விட்டு வெளியேறிவிட்டது. ஆனால், 1000 பேர் ஒரு மது கடையில் கூட அனுமதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அங்கு தான் ஆன்மா (spirits) உள்ளன என பதிவிட்டு உள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…