20 நாட்களாக எதிர்க்கட்சியினரின் அமளியால் இயங்காமல் முடங்கியது நாடாளுமன்றம்…!
நாடாளுமன்றம் எதிர்க்கட்சியினரின் அமளியால் 20 நாட்களுக்கும் மேலாக முடக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.
தலித்துகள் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு , சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம், வங்கிகளில் நடைபெறும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்த உள்ளன.
நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்சினை, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் பிரச்சினை, உள்ளிட்டவைகளால் பல நேரங்களில் அமளி நீடித்தது. இதே போல் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் அமளியில் ஈடுப்டடிருந்தன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.