இந்திய சாதனை புத்தகத்தில் பெயர் பதித்த 2 வயது சிறுமி..!

Default Image

சிறுமியின் அபார ஞாபகசக்தியால் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் தெயன்ஸ்ரீ.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் வசந்தம் நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி-பவித்ரா. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில மாதத்திலேயே பெற்றோர் சொல்லி கொடுப்பதை அப்படியே கேட்டு நடந்துள்ளது. பிறகு, டிவி விளம்பரங்களை அதேபோன்று செய்து நடித்து காண்பித்துள்ளது. தமது குழந்தையின் அபார ஞாபக சக்தியை பார்த்து வியந்த பெற்றோர் குழந்தைக்கு நிறைய புத்தகங்களை வாங்கி அதில் இருப்பதை சொல்லி கொடுத்துள்ளனர்.

அதை திருப்பி கேட்கும் பொழுது உடனே அக்குழந்தையும் பதில் அளித்துள்ளது. இவள் திறமையை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இவளது பெற்றோர் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஹரியானாவில் இருக்கும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை பெற்றோர் தொடர்பு கொண்டு மகளின் திறமையை கூறியுள்ளனர். 2 வயது தெயன்ஸ்ரீக்கு 11 தலைப்புகளில் போட்டியை நடத்தியுள்ளனர். அதில் தேசிய தலைவர்கள், பழவகைகள், நிறங்கள், விலங்குகள் போன்ற 9 தலைப்புகளில் இவளது அசாதாரண திறமையை காட்டியுள்ளார்.

இதனால் இந்த குழந்தையின் பெயர் தற்போது குழந்தைகளுக்கான இந்திய சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மேலும், விருதுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கியிருக்கின்றனர். இந்த குழந்தை புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், இந்த தெயன்ஸ்ரீ நினைவாற்றலை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்