2 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. 2 பேர் கைது!

Default Image

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் இரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் ஷாஹ்புரா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய வயலில் கடந்த மாதம், 18 ஆம் தேதி காயங்களுடன் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, அந்தப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தெரியவந்தது.

மேலும், அந்த சிறுமியின் தந்தை, சிறுமியை காணவில்லை என போலீசாரிடம் புகாரளித்ததாக தெரியவந்தது. சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சிறப்பு படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது. அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த சோனு கோண்ட் (21), சுபம் மல்லா (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 376 (கற்பழிப்பு), 363 (கடத்தல்), 302 (கொலை), 201 (சான்றுகள் காணாமல் போகின்றன) போக்ஸோ மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜபல்பூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
narendra modi HAPPY
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal
Arvind Kejriwal - Atishi
L2E EMPURAAN