விவசாயிகள் நலனுக்காக கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 2 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும்-சதானந்த கவுடா

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில் கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்ட விவசாயிகள் நலனுக்காக கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 2 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.