ஆசிரியரின் மகனை கொலை செய்த பிளஸ் டூ மாணவர்..!

நேற்று மாலை டியூசன் கட்டணம் செலுத்தாததற்காக ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.

ஒடிசாவில் கோர்தா மாவட்டத்தில் உள்ள பெனபஞ்சரி கிராமத்தில் நேற்று மாலை  ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவர் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து புவனேஸ்வர் துணை போலீஸ் கமிஷனர் பிரதீக் சிங் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ஆசிரியர் மகன் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் தனது அறையில் இருந்தபோது ஆசிரியர் மற்றும் அவரது கணவர் தங்கள் வீட்டில் உள்ள மற்ற அறைகளில் டியூஷன் வகுப்புகளை எடுத்து கொண்டு பிஸியாக இருந்துள்ளனர்.

அப்போது தங்களின் மகனின் திடீர் அலறல் சத்தம் கேட்டு, அவரது அறைக்கு ஆசிரியர் மற்றும் அவரது கணவர் வந்த போது தங்களின் மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை உடனடியாக குர்தா மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம்  நடந்த இடத்தில் இருந்த பள்ளி சீருடை மற்றும் பிற பொருட்களை கொண்டு  பிளஸ் டூ மாணவனை நாங்கள் கண்டுபிடித்தோம். விசாரணையின் போது தனது குற்றத்தை பிளஸ் டூ மாணவர் ஒப்புக்கொண்டார். நாங்கள் பள்ளி பை, உடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்றியுள்ளோம். விசாரணையில், பிளஸ் டூ மாணவர் கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாயிடம்  டியூசன் சென்று படித்து வந்துள்ளார்.

டியூசன் கட்டணம் செலுத்தாததற்காக பொது இடங்களில் வைத்து உயிரிழந்த சிறுவனின் தாய் அதாவது ஆசிரியை அவமானப்படுத்தி உள்ளார். அதனால் கோபத்தில் இருந்த பிளஸ் டூ மாணவர் ஆசிரியரின் மகனை கத்தியால் குத்தியுள்ளார். இருப்பினும், சிறுவனின் தந்தை மனோஜ் பல்தாசிங், நிலுவையில் உள்ள டியூசன் கட்டணத்தை செலுத்துமாறு பிளஸ் டூ மாணவனை ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறினார்.

ஆனால் சிறுவனின் பெற்றோர்கள்  பிளஸ் டூ மாணவன் பணத்துக்காக எங்களது மகனை கொலை செய்து இருக்கலாம். அவருக்குப் பின்னால் வேறு யாராவது இருக்கலாம். சரியான காரணத்தைக் கண்டறிய சிபிஐ மூலம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth
Wikki Nayan