பெங்களூருவில் சரிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்..!வீடியோ..!

பெங்களூருவில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்று சரசரவென சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் இருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த பழைய கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளாகவே பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்த கட்டிடத்தில் மெட்ரோ கட்டுமான பணியாளர்கள் தங்கி இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இந்த கட்டிடம் சற்று லேசாக அசைந்து ஆடியுள்ளது. பின்னர் இந்த கட்டிடத்தின் சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றி அனைவரையும் காத்துள்ளனர்.
இதனையடுத்து சரசரவென சீட்டு கட்டு சரிந்து விழுவது போல், இடிந்து விழுந்து அக்கட்டிடம் தரைமட்டமாகியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
Three storey Building
collapse in #Bengaluru No causality Reported…#India #Gulab pic.twitter.com/u98963X5Lt— Khudro Manush (@KhudroManush) September 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025