2 மாநில தேர்தல்… 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு விவரம் இதோ..

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 230 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. 109 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் , ஆட்சி அமைத்த ஒன்றறை வருடத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலருமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் கூட்டாக ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது.

இதையடுத்து மத்திய பிரதேசத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் 4-ஆவது முறையாக பதவியேற்றார்.  மத்திய பிரதேசத்தில் இன்று  230 தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவானது மொத்தம் 64,626 வாக்குசாவடிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் படி இந்த மாநிலத்தில் 230 தொகுதிகளிலும் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும், சத்தீஷ்காரில் 2-ஆம் கட்டமாக  70 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை நிலவரப்படி  5.71% வாக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 11.13% வாக்குகளும் பதிவாகியுள்ளன. சத்தீஷ்காரில் கடந்த 7 ஆம் தேதி முதற்கட்டமாக  20 தொகுதிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்