அமுல் பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு!
பால் விலை உயர்வு குஜராத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பொருந்தும் என அமுல் நிறுவனம் அறிவிப்பு.
நிறை கொழுப்பு பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 3 வது முறையாக அமுல் பால் விலை உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும் என அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வருவதால் அங்கு பால் விலை உயர்த்தப்படவில்லை இல்லை என விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.
‘அமுல்’ என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (ஜிசிஎம்எம்எஃப்) விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வால், ஃபுல் கிரீம் பால் லிட்டருக்கு ரூ.61ல் இருந்து ரூ.63 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 16 அன்று பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.