512 கிலோ வெங்காயத்திற்கு 2 ரூபாய்..! விவசாயி வேதனை..!
மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயத்திற்கு 2 ரூபாய் கொடுத்ததால் விவசாயி வேதனை அடைந்துள்ளார்.
மும்பை: மகாராஷ்டிராவில் 70 கி.மீ பயணித்து 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயிக்கு 2 ரூபாய் மட்டும் ஏலம் எடுத்தவர் கொடுத்துள்ளார். சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பார்ஷி தாலுகாவின் போர்கான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் என்பவர். அவர் தனது நிலத்தில் அறுவடை செய்த 512 கிலோ வெங்காயத்தை ஏலத்தில் விற்பதற்காக 70 கி.மீ பயணம் செய்து சோலாப்பூர் விவசாய சேவை மையம் ஏபிஎம்சிக்கு வந்துள்ளார். அவர் கொண்டு வந்த 512 கிலோ வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 1 ரூபாய்க்கு ஏலம் போனது.
இதனால் 512 கிலோவிற்கு ரூ.512 கிடைத்தது. ஆனால் வெங்காயத்தை ஏலம் எடுத்தவர் விவசாயிடம் ரூ.2 ற்கான காசோலையை கொடுத்துள்ளார். இது குறித்து துக்காராம் கேட்டதற்கு ஏற்றுமதி செலவு, ஆள் கூலி, போக்குவரத்து செலவுகளை காரணம் காட்டி 512 ரூபாயில் இருந்து 509.50 ரூபாயை கழித்துக் கொண்டதாகவும், மீதமிருந்த 2.49 ரூபாயில் இருந்து 49 பைசாவை கழித்து வட்டமாக ரூ.2 கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த விவசாயி துக்காராம் சவான், “கடந்த ஆண்டுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த முறை சுமார் 500 கிலோ வெங்காயத்தை விளைவிக்க கிட்டத்தட்ட 40,000 ரூபாய் செலவிட்டேன்” என்று கூறினார்.