#BREAKING: 2 பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!
2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதில், பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து தனியார் மயமாக்கப்படும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பொதுத்துறை வங்கி தனியார் மயமாக்கப்படும் எனவும், எல்.ஐ.சி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பங்குச் சந்தைகள் மூலம் எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு வசம் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவினை பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். இதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.