இரு பயணிகளுக்கு கொரோனா.! மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை.!

விமான விபத்தில் மீட்கப்பட்ட நபர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதால், மீட்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள சி.ஐ.எஸ்.எஃப் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீட்கப்பட்ட நபர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதாம். ஆதலால், மீட்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள சி.ஐ.எஸ்.எஃப் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களையும் தனிமைப்படுத்திக்கொள்ள விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.