ஹோட்டலில் தீ விபத்தில், 2 பேர் பலி!
லக்னோவில் உள்ள லெவானா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஹோட்டல் லெவனாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஐந்து முதல் ஆறு பேர் இன்னும் ஹோட்டல் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று(செப் 5) காலை தீ விபத்து ஏற்பட்டது.
ஹோட்டலில் தங்கியிருந்த பலரும் தங்களுடைய அறைகளின் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு விடுதியிலிருந்து தப்பிக்க முயன்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.