டெல்லியில் விரிவாக்கப் பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி!
டெல்லி ஜோஹ்ரிபூரரில் விரிவாக்கப் பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு டெல்லியின் ஜோஹ்ரிபூர் விரிவாக்கப் பணியின் போது வெள்ளிக்கிழமை(செப் 16) காலை புதுப்பிக்கப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “காலை 11:50 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து ஒரு போலீஸ் குழு, நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு சம்பவ இடத்திற்கு வந்ததாக” அவர் கூறினார்.
மீட்பு பணியின் போது ஒரு பெண் உட்பட ஏழு பேர் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள்ளதாகவும், 2 இறந்த உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.