அரசு குடிநீர் குழாயில் நீர் அருந்தி 2 பேர் பலி.. 42 பேர் மருத்துவமனையில் அனுமதி.! ஆட்சியர் விளக்கம்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் அரசு குடிநீர் குழாயில் அசுத்த நீர் கலந்த நீரை குடித்து 2 பேர் உயிரிழந்தனர். 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மக்கள் அரசு குடிநீர் குழாயில் வந்த அசுத்த நீரை குடித்து வயிற்றுப்போக்கு காரணமாக ஏரளாமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.
இதில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி துர்க் மாவட்ட ஆட்சியர் புஷ்பேந்திர குமார் மீனா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், அமிர்த் மிஷன் எனும் திட்டம் மூலம் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வடிகால்கள் மூலம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக தீங்கு விளைவிக்கும் வகையிலான சில கூறுகள் குழாய்களில் நுழைந்து தண்ணீரை மாசுபடுத்திவிட்டன. இதனால் தான் அந்த குடிநீரை குடித்த மக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என ஆட்சியர் விளக்கம் அளித்தார்.