ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் நகரில் நேற்று பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜம்மு காவல்துறை இணைந்து நடத்தியதாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ல்ஷ்கர்இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சஜித் மற்றும் பிலால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு ஏ.கே 47 ரைபிள்ஸ், சேட்டிலைட் போன் ஒன்று ஆகியவை அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்திற்கு பயங்கரவாதிகள் வந்தாக தகவல் வெளியானது. இந்த குழுவில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், காஷ்மீரில் நடந்து வரும் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி இது என கூறப்பட்டது.
இதனால், பூஞ்ச் நகரில் பாதுகாப்புப் படையினர் தேடல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது, பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சரணடையச் சொன்னார்கள், ஆனால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…