நாளை மற்றும் நாளை மும்பையில் I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, நாளை மாலை 6.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. இதுபோன்று செப்டம்பர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் லோகோ வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினமே 3.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த நிலையில் நாளை மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே உள்பட கூட்டாக கூறுகையில், மும்பையில் நாளை முதல் 2 நாட்களுக்கு இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தியா கூட்டணி கூட்டம் மகாராஷ்டிராவில் நடக்கப் போவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைகின்றன. இந்தியா கூட்டணியில் ஏற்கனவே பெங்களூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகள் இருந்த நிலையில், தற்போது மேலும் 2 கட்சிகள் இணைகின்றன. நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தியா கூட்டணிக்கான இலச்சினை ஆலோசனை கூட்டத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவை பாதுகாக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். INDIA கூட்டணியின் வளர்ச்சியை பார்த்து பயத்தில் பாஜக இலவசமாக கூட கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கும்.
இந்தியா கூட்டணி ஆலோசனையில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து வரும் தலைவர்களுக்கு நாளை விருந்தளிக்கிறார் உத்தவ் தாக்கரே. மேலும், நாளை முதல் இரண்டு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…