தண்ணீர் குழாய் பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்.!

தண்ணீர் குழாய் சரி செய்யும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பையின் சுமன் நகர் பகுதியில் தண்ணீர் குழாய் பழுதுபார்க்கும் போது இரண்டு தொழிலாளர்கள் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும், அருகில் இருந்து ஐந்து பேர் காயமடைந்தனர், இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் சம்பவம் நடந்துள்ளது .
இந்நிலையில், ஏழு பேரும் அருகிலுள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மீதமுள்ள ஐந்து பேரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025