2014-இல் 2;பாஜக ஆட்சியில்-1…காங்.எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம்!

Default Image

கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்த்தின.இதனால்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து,வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று ரூ.50 உயர்த்தின.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆறு வாரங்களுக்குள் இரண்டாவது விலை உயர்வு ஆகும்.ஏற்கனவே பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,2014 ஆம் ஆண்டில் 2 சிலிண்டர் வாங்கும் அளவுக்கு பணம் இருந்த நிலையில்,தற்போது அதே அளவு பணம் 1 சிலிண்டர் வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்று மத்திய அரசை கண்டித்து ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

2014 இல் காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.410  ஆக இருந்த நிலையில்,மானியம் ரூ.827 வழங்கப்பட்டது.ஆனால்,தற்போது (2022) பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.999 ஆக உயர்ந்துள்ளது.ஆனால்,       சிலிண்டருக்கு மானியம் தரப்படுவதில்லை.இதனால்,காங்கிரஸ் ஆட்சியில் 2 சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை,தற்போது 1 சிலிண்டர் வாங்க மட்டுமே போதுமானதாக உள்ளது”,என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,ஏழை மற்றும் நடுத்தர இந்திய குடும்பங்களின் நலனுக்காக காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்கிறது.அதுவே நமது பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை”,என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்