ரூ.1.8 லட்சம் மதிப்பில் 2 துப்பாக்கிகள்., ரூ.20,000 மதிப்பில் ருத்ராட்ச மாலை – வெளியான உபி முதல்வரின் சொத்து மதிப்பு!

Published by
Castro Murugan

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த உத்தரபிரதேச மாநிலம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியீடு.

உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 10 தேதி நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்களும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். 5 மாநில தேர்தலுக்கான வேட்புமனுக்கு தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான கோரக்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த உத்தரபிரதேச மாநிலம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. அதாவது, உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.1.5 கோடி சொத்து இருப்பதாக பிராமண பாத்திரம் தாக்கல் செய்துள்ளார். வங்கி டெபாசிட்டுகள், கையிருப்பு ரொக்கம், ஆபரணங்கள், ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றின் மதிப்பை பட்டியலிட்டுள்ளார். குறிப்பாக ரூ.1.8 லட்சம் மதிப்பில் 2 துப்பாக்கிகள் வைத்திருப்பதாகவும் பிராமண பாத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் மதிப்புள்ள ரிவால்வர் மற்றும் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ரைபிள் ஆகிய 2 துப்பாக்கிகள் வைத்துள்ளார். இதுபோன்று ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ருத்ராட்ச மாலை, ரூ.49,000 மதிப்பில் தங்கத்தால் ஆன காதணிகள், ரூ.12 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கழுத்தில் அணியும் ஆகியவை உள்ளதாகவும் தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே,  நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. மேலும், முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago