ஹமாஸ் தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பெண் பாதுகாப்பு அதிகாரிகள் மரணம்!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் 10வது நாளாக இன்றும் நீடித்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இஸ்ரேலியன் தாக்குதலில் காசா நகரில் 2.670 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய யூத மக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் 9,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படியான சூழலில், ‘ஆபரேஷன் அஜய்’ எனும் திட்டம் மூலம் மத்திய அரசு இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியர்களை மீட்டு வருகிறது.
அப்படி இருந்தும், இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இஸ்ரேலிய பெண் பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்னர். இவர்கள் இருவரும் போரில் பணியில் இருந்தபோது தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அந்த தகவளின்படி, 22 வயதான அஷ்டோட் பகுதியின் ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் தளபதி லெப்டினன்ட் ஆர் மோசஸ் மற்றும் காவல் துறையின் மத்திய மாவட்டத்தில் எல்லைக் காவல் அதிகாரி இன்ஸ்பெக்டர் கிம் டோக்ராக்கர் ஆகியோர் அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோதலில் இதுவரை 286 ராணுவ வீரர்கள் மற்றும் 51 போலீஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களைத் தேடி வருவதால், பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025