உத்தரகண்ட் நிலச்சரிவில் இயந்திரங்களுடன் பள்ளத்தாக்கில் விழுந்து 2 டிரைவர்கள் மாயம்.!

Default Image

உத்தரகண்ட் நிலச்சரிவில் கனமான பூமி நகரும் இயந்திரங்கள் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 2 டிரைவர்கள் காணவில்லை.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த இரண்டு “Earth Moving Heavy Equipment”  டிரைவர்கள் காணவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.

“Kaudiyala” அருகே நிலச்சரிவின் போது வாகனங்கள் பெரிய பாறைகளில் மோதியதாக முனி கி ரெட்டி காவல் நிலைய பொறுப்பாளர் ஆர்.கே சக்லானி தெரிவித்தார்.

இப்பகுதியில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து கங்கை நதி பள்ளத்தாக்குக்கு கீழே பாய்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலை 4 மணியளவில் ஒரு கட்டுமான இடத்திலிருந்து திரும்பும் போது வாகனங்களில் ஒன்று பாறைகளில் மோதியதாக  சக்லானி கூறினார்.

இந்நிலையில் பள்ளத்தாக்கில் விழுந்த சஞ்சீவ் குமார் , பிரபாத் ஆகியோரைக் கண்டறிய பணி நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த தேடல் பகல் நேரத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டது என்று சக்லானி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்