40 விநாடிக்குள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி – ராஜஸ்தான் பெண்மணி!

Default Image

இராஜஸ்தானை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு 40 விநாடிகளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடுவது ஒன்றே தீர்வு என மக்கள் தற்பொழுது விழிப்புணர்வு அடைந்துள்ள நிலையில், பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தடுப்பூசி போட கூடிய மக்கள் பல நேரங்களில் தடுப்பூசி போடும் ஊழியர்களின் அலட்சியத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. சிலருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த அடுத்த நிமிடங்களிலேயே மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன் ஜுனு என்னும் மாவட்டத்தில் உள்ள பக்காரா எனும் கிராமத்தில் கடந்த ஜூலை 3ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது அந்த முகாமிற்கு சுரேந்திர குமார் எனும் நபர் தனது மனைவி மாயாவை அழைத்து வந்துள்ளார். அங்கு தடுப்பூசி போட சென்றபொழுது ஊழியர்கள் தொலைபேசியில் பிஸியாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மாயாவுக்கு ஒரு பெண் ஊழியர் தடுப்பூசி முதல் டோஸ் போட்டதும், அடுத்து ஒரு பெண் ஊழியர் மீண்டும் தடுப்பூசி போட வந்துள்ளார்.

ஏற்கனவே அவர் போட்டு விட்டார் என்று மாய கூறினாலும் அவர் தொலைபேசியில் பிஸியாக இருந்ததால் மாயாவின் பேச்சை கண்டு கொள்ளவில்லை. அதன் பின்பு மாயாவின் கணவர் பிரச்சனை செய்ததும் ஒன்றுமில்லை சற்று நேரம் தடுப்பூசி முகாமில் அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு செல்லுங்கள் என கூறியதாக மாயாவின் கணவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை மாயாவுக்கும் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்பட வில்லை எனவும், இனி அவரது மனைவிக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு சுகாதாரத்துறை தான் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்