பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க அரசு ஊழியர்களுக்கு 2 நாள் சிறப்பு விடுப்பு.!
![Assam GOVT Leave](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/07/Assam-GOVT-Leave-.webp)
அசாம் : அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக, 2 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கி அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சத் பூஜை (நவம்பர் 7) விடுமுறை நாளை தொடர்ந்து, நவம்பர் 6, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு “வயதான பெற்றோர் அல்லது மாமியார்களுடன் நேரத்தை செலவிடுவதற்கும் அவர்களை கௌரவப்படுத்தவும், மதிக்கவும், பராமரிக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும், தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல” என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.
இது போக, நவம்பர் 9 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் நவம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் வருகிறது. ஆனால், இதற்கு பெற்றோர் அல்லது மாமியார் இல்லாதவர்கள் அதற்குத் தகுதி பெற மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்து. அப்படியென்றால், தொடர்ந்து 5 நாள் விடுமுறை நாட்கள் வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)