Categories: இந்தியா

தேர்தல் நாளிலும் ஓயாத வன்முறை.! மணிப்பூரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!

Published by
மணிகண்டன்

Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதற்றம் குறைவாக உள்ள மாநிலங்களில் தேர்தலை ஒரே கட்டமாகவும், பாதுகாப்பு கூடுதலாக தேவைப்படும் மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாகவும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

கடந்த மே மாதம் முதல் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில் (ஏப்ரல் 19) மணிப்பூர் உள் மற்றும் மணிப்பூர் வெளி என இரண்டு தொகுதிகளிலும் குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று (ஏப்ரல் 26) மீதமுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

முதற்கட்ட தேர்தலின் போதே வாக்குப்பெட்டியை எரிக்கும் சம்பவங்களும், துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடைபெற்றது. அப்போது ஒருவர் மட்டும் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளின் போதும் இதே போல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரன்சேனா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இருந்து, அங்கிருந்த ராணுவ முகாம்கள் மீது உள்ளூர் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 2 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த தாக்குதல் இன்று அதிகாலை 2.15 மணிவரை தொடர்ந்து உள்ளது.

உயிரிழந்த 2 சிஆர்பிஎப் வீரர்களும் 128 பட்டாலியனை சேர்ந்தவர்கள் என்றும்,  நரன்சேனா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் குக்கி இன தீவிரவாதிகள் என ANI செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

13 minutes ago
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

52 minutes ago
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

57 minutes ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

3 hours ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

3 hours ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

3 hours ago