கொரோனா தடுப்பு நிவாரண பணிக்கு ஆளுநர் பன்வாரிலால் ரூ.2 கோடி நிதியுதவி.!
கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும் ஆளுநர் நிதியுதவி வழங்கியுள்ளார்.