Budget 2024 : அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் – நிர்மலா சீதாராமன்!
குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளில் கிராமங்களில் மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில், குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், ஏற்படும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் கிராமின் யோஜனா திட்டத்தின் கீழ், 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு, கிராமங்களில் 2 கோடி வீடுகளைக் கட்டி தரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Budget 2024 : வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.! – நிர்மலா சீதாராமன்.!
கொரோனா காலகட்டத்தில் சவால்கள் இருந்தபோதிலும், பிரதமர் ஆவாஸ் கிராமின் யோஜனா தொடர்ந்து செயல்பட்டது. அந்த காலகட்டத்திலும் மூன்று கோடி வீடுகள் என்ற இலக்கை எட்டுவதற்கு அருகில் இருக்கிறோம். மேலும் இரண்டு கோடி வீடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.