பிக்பாஸ்கெட் நிறுவனத்திடமிருந்து திருடப்பட்ட 2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்!
பிக்பாஸ்கெட் நிறுவனத்திடமிருந்து திருடப்பட்ட 2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்.
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் பொருட்களின் மீது அதிகம் நாட்டம் காட்டுகின்றனர். இந்நிலையில், பிரபல ஆன்லைன் நிறுவனமான பிக்பாஸ்கெட் நிறுவனம், 18,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளையம், 1,000-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை கொண்டுள்ளது.
இந்நிலையில், பிரபல ஆன்லைன் மளிகைப்பொருள் நிறுவனமான பிக்பாஸ்கெட்டிடமிருந்து, 2 கோடி பயனர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது. பயனர்களின் பெயர், செல்போன் எண், முகவரி, இணைய முகவரி போன்ற தகவல்கள் திருடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிக்பாஸ்கெட் நிறுவனம் இதுகுறித்து பெங்களூர் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளது. இந்த தகவல்களை திருடிய மர்ம நபர்கள், டார்க் வெப்சைட்டில் அவற்றை பதிவேற்றி, அவற்றை ரூ.30 லட்சத்திற்கு விற்க முயன்றதாகவும் புகார் அளித்துள்ளனர்.