கொல்கத்தாவில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் நடந்த மோதலில் பஞ்சாப் குண்டர்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று கொல்கத்தாவில் உள்ள நியூ டவுனில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இடையே இரண்டு பஞ்சாபைச் சேர்ந்த மோஸ்ட் வாண்டட் குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேற்கு வங்கம் என்கவுண்டரில் ஒரு சிறப்பு பணிக்குழு அதிகாரியும் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது. அதாவது கொல்கத்தாவில் உள்ள நியூ டவுனில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் சிறப்பு பணிக்குழு சோதனை நடத்தியது, அங்கு பஞ்சாபில் இருந்து குற்றவாளிகள் இருவர் மறைந்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளிகள் இருவரும் சிறப்பு பணிக்குழு அதிகாரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தகவல்களின்படி ஜெய்பால் சிங் புல்லர் என்பவர் ஜாக்ரானில் இரண்டு உதவி துணை ஆய்வாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் கொள்ளை, கொலை, மிரட்டி பணம் பறித்தல், கடத்தல் தொடர்பான 40 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தேடப்பட்ட குற்றவாளி ஆவார். இருப்பினும், இருவரும் தொடர்பான விவரங்கள் இன்னும் போலீசாரால் பகிரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பலியான மற்றொரு குற்றவாளி ஜஸ்பிரீத் காரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரு குற்றவாளிகளையும் பிடித்துக்கொடுக்க பஞ்சாப் காவல்துறை ரூ.10 லட்சம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…