பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 நிறுவனங்களுக்கு அபராதம்..!
பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் 2 பீர் நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விதிகளை மீறி மதுபான நிறுவனங்கள் இணைந்து பீர் விலையை நிர்ணயிப்பது குறித்து புகார் எழுந்துள்ளது.
இதன் பின்னர் இந்த முறைகேடு குறித்து தாமாக முன் வந்து 2017 ஆம் ஆண்டு விசாரணை நடத்தியது. இது குறித்து இந்திய வணிக போட்டி ஆணையம் கடந்த 4 ஆண்டுகளாக விசாரித்து வந்த நிலையில் யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா ஆகிய நிறுவனங்கள் உட்பட 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய 231 பக்க உத்தரவில் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்திற்கு ரூ.752 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்ல்ஸ்பெர்க் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.121 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பீர் விலை நிர்ணய முறைகேட்டில் இந்தியாவில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், டெல்லி மற்றும் புதுச்சேரியில் உள்ள நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.