கொரோனா பாதித்து 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலி.!
இதுவரை 193 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் இரண்டு பி.எஸ்.எப் வீரர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க போராடும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள், ராணுவ வீரர்களையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.
ஏற்கனவே துணை ராணுவ படை பிரிவில் ஒன்றான சி.ஆர்.பி.எஃப்பில் பணியாற்றி வந்த 55 வயது அதிகாரிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்,
இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையான பி.எஸ்.எப் ராணுவ பிரிவில் இதுவரை 193 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் இரண்டு பி.எஸ்.எப் வீரர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.