ஸ்ரீநகரில் 2 இராணுவ வீரர்கள் வீர மரணம்..!
இன்று ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
மூன்று பயங்கரவாதிகள் எங்கள் இராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிகள் ஒரு காரில் தப்பிச்சென்றனர். மாலைக்குள் நாங்கள் அந்தக் குழுவை அடையாளம் காண்போம். அந்த மூன்று பேரில் இருவர் அநேகமாக பாகிஸ்தானியர்கள் என்றும் ஒருவர் உள்ளூரை சார்ந்தவர் என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தனர்.