கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 2,61,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,88,109 உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு 2-லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 18,01,316 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது. அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 419 உயிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,38,423 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,28,09,643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இதுவரை இந்தியாவில் 12,26,22,590 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் ஐந்து மாநிலங்களில் மகாராஷ்டிரா 67,123 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 27,334 பேரும், டெல்லி 24,375 பேரும், கர்நாடகாவில் 17,489 பேரும், சத்தீஸ்கரில் 16,083 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…