30 ஆண்டுகளாக தர்மம் எடுத்த பெண்ணின் வீட்டில் 2.60 லட்சம் பணம்!
30 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் தர்மம் எடுத்து வந்த பெண்ணின் குடிசையிலிருந்து 2.60 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு குடிசையில் வசித்து வரக்கூடிய பெண்மணி ஒருவர் தர்மம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பெண்மணியை அழைத்து செல்வதற்காக நேற்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள முதியோர் காப்பக ஊழியர்கள் அவரது வீட்டிற்கு அப்பெண்மணியை அழைத்து செல்வதற்காக வந்துள்ளனர். மேலும், அவரது குடிசையிலிருந்து குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த நகராட்சி ஊழியர்களும் வந்துள்ளனர்.
அப்பொழுது அவரது குடிசையில் பல பைகளில் ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் குவியல் குவியலாக இருந்துள்ளது. இதனை பார்த்த நகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, பானங்களை எண்ணியுள்ளனர். அதில் 70 முதல் 80 கிலோ நாணயங்கள் இருந்ததாகவும், மேலும் பல ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளது.
30 ஆண்டுகளாக அவர் தர்மம் எடுத்த பணத்தை வீட்டில் சேமித்து வைத்து உள்ளார். அவர் அங்கு தனியாக வசித்து வந்ததால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது அவருக்கு பண உதவி செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்த பணத்தை கணக்கிட்டதில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் அவரிடமிருந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுகள் பல கிழிந்த நிலையிலும் இருந்துள்ளது.