அசாமில் ஏற்பட்ட வெள்ளம்…. 2.25 மேற்ப்பட்ட மக்கள் பாதிப்பு..!
இந்தியாவில் வட பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் பீகார் மற்றும் அசாம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த கனமழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அம்மாநில அரசு இதுகுறித்து கூறுகையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 13 வருவாய் வட்டங்களை கொண்ட 219 கிராமங்களில் மக்கள் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட சுமார் 2.25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது சொந்த வீடுகளை இழந்து வாழ்வாதாரத்திற்காக தவிக்கின்றனர்.
இந்த வெள்ள பாதிப்பில் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.